எந்த ஒரு வழிபாடும் ஆரம்பிக்கும்போது 'இதற்காக இந்தப் பூஜை பண்ணுகிறேன்' என்று 'ஸங்கல்பம் (mental resolve, vow, determination)' செய்து கொள்ள வேண்டும். 'எதற்காக' என்றால், ஸஹ குடும்பம் (தன் குடும்பம் முழுதும்).
க்ஷேமம் (சுகம்,
well-being, happiness, prosperity)
ஸ்தைர்யம் (ஸ்திரத்
தன்மை, Stability)
வீர்யம் (வலிமை, (உடல்)
பலம், strength, vigor, power)
விஜயம் (வெற்றி,
victory, success)
ஆயுஸ் (ஆயுள், வாழ்நாள்,
lifetime)
ஆரோக்கியம் (நோயின்மை,
freedom from disease)
ஐஸ்வர்யம் ((பல வகையான)
செல்வம், wealth)
ஆகிய எல்லாவற்றிலும்
அபிவிருத்தி (முன்னேற்றம்) காண்பதற்காக என்று ஏழு விஷயங்களைச் சொல்லி, அப்புறம்
தர்ம
(அறம், dharma, ethics) - அர்த்த (பொருள், artha, securities, wealth) - காம (இன்பம்,
kama, pleasures) - மோக்ஷம் (வீடு, moksha, liberation) என்று நான்கு புருஷார்த்தங்கள்
ஸித்திப்பதற்காகவும் - ஏழும் நான்கும் பதினொன்று. அப்புறம்,
இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம்
என்பதற்காக எண்ணங்களின்/மனவிருப்பங்களின் பூர்த்தியை (நிறைவு, முழுமை)
வேண்டி என்று ஒன்று - இதோடு பன்னிரண்டு. அப்புறம்,
ஸமஸ்த (அனைத்து) மங்களங்களும் கிடைப்பதற்காக,
ஸமஸ்த துரிதங்களும் (பாபங்களும்) ஒடுங்கிப் போவதற்காக என்று மேலும் இரண்டைக் கூட்டி,
இதோடு பதினான்கு. அப்புறம்,
புத்ர பௌத்ரர்கள் அபிவிருத்தியாவதற்காக என்று பதினைந்தாவது;
கடைசியாக எந்த ஸ்வாமிக்குப் பூஜையோ அவருக்கு ப்ரீதி (திருப்தி, மனநிறைவு, மகிழ்ச்சி)
ஏற்பட்டு அவர் ப்ரஸாதத்தால் நம் விருப்பம் எல்லாம் நிறைவேற வேண்டும் என்று பதினாறு
விஷயங்களைப் ப்ரார்த்தித்து ஸங்கல்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இதில் லௌகிகம்
அதிகம் இருக்கிறதென்று நினைப்பவர்கள்
முடிவாக, இன்னும் இரண்டு சேர்த்துக் கொள்வார்கள். ஞானம், வைராக்யம் என்ற இரண்டு ஸித்திப்பதற்காக
(ஞான வைராக்ய ஸித்யர்த்தம்) என்று சேர்த்துக் கொள்வார்கள்.
No comments:
Post a Comment