Saturday, January 29, 2022

திருமந்திரம் - ஐந்து கரத்தனை

 விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை[1] யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

ஐந்து கரத்தனை - ஐந்து கைகளையும்
யானை முகத்தனை - யானை முகத்தையும்
இந்தின் – சந்திரனது (இந்து – சந்திரன்)
இளம்பிறை போலும் - இளமை நிலையாகிய பிறைபோலும் (crescent shaped)
எயிற்றனை - தந்தத்தையும் உடையவரும் (எயிறு - tusk of an elephant)
நந்தி மகன்தனை - சிவபிரானுக்குப் புதல்வரும் (நந்தி – சிவன்)
ஞானக் கொழுந்தினைப் - ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை (கொழுந்து – சுடர்)
புந்தியில் வைத்து - உள்ளத்தில் வைத்து (புந்தி has 2 meanings - புத்தி, மனம்)
அடி போற்றுகின்றேனே - அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.



[1] In a few texts this verse starts with அந்தி நிறத்தனை


No comments: