Monday, July 5, 2021

கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!

கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!

இந்தச் சொல்வழக்கை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நமக்கு தெரிந்த அர்த்தம் - பார்த்தவன் பேச மாட்டான். பேசுபவன் பார்த்திருக்க மாட்டான். இதன் உண்மையான அர்த்தம் வேறு. 

அதாவது, மெய்ப்பொருளைக் கண்டவன், வேற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டான். வேற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் மெய்ப்பொருளைக் காண்பதில்லை.  மெய்ப்பொருளைக் கண்டவன், வேற்றுமைக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் தருவதில்லை. அது அவனை பாதிக்காது.

கேன உபநிஷத் இரண்டாவது காண்டம் – 3வது ஸ்லோகம்

यस्यामतं तस्य मतं मतं यस्य न वेद सः |
अविज्ञातं विजानतां विज्ञातमविजानतां || ||

யார் ப்ரஹ்மத்தை அறிய முடியாது என்று அறிகிறாரோ, அவர் அதை அறிந்தவர்; யார் ப்ரஹ்மத்தை அறிந்தேன் என்று நினைக்கிறாரோ, அவர் அதைப்பற்றி அறியாதவர். யாருக்குத் தெரியாதோ, அவருக்குத் தெரியும். யாருக்குத் தெரியுமோ, அவருக்குத் தெரியாது.”

கேன உபநிஷத்தின் இரண்டாவது காண்டம் முதல் மற்றும் இரண்டாம் ஸ்லோகங்களும் இதே கருத்தையே நிலைநாட்டுகின்றன. இறைவனின் பண்புகளை யாராலும் முழுமையாக அறிய முடியாது என்பதே அது. இதைத்தான், தமிழில் எளிமையாக, ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்‘, என்று நம் முன்னோர் கூறியிருக்கின்றனர்.


குறிப்பு: 

விண்டிலர் என்றால் விள்-ளுவது - பிளவுபடுத்துதல் 

விள்(ளு)-தல் viḷ- , 2 v. intr. 
1. To open out, expand; to unfold, as a blossom;
மலர்தல். (சூடா.) 
2. To crack; உடைதல். அந்தப் பழம் கீழ்விழுந்ததனால் விண்டுபோயிற்று. 
3. To split, burst; வெடித்தல். (யாழ். அக.) 
4. To be at variance; to be opposed; மாறுபடுதல். விள்வாரை மாறட்ட வென்றிமறவர் (பு. வெ. 1, 14). 
5. To become clear; தெளிவாதல்.

விள்(ளு)-தல்
viḷ- , — tr. 
1. To break open; to split;
பிளத்தல். பழத்தை விண்டான்.
2. To hate; பகைத்தல். விண்டு . . . மண்டினார் (சீவக. 418). 
3. To be separated from; to leave; நீங்குதல். வினைகளும் விண்டனன் (தேவா. 928, 7). 
4. To say, tell; சொல்லுதல். தன்னிடத்து வந்து விள்ளான் (திருவாலவா. 33, 10). 
5. To reveal, make known; வெளிப்படுத்துதல். உமக்கே விண்டு பேசினல்லால் (அஷ்டப். திருவரங்கக். 70). 
6. To open, as the mouth; வாய் முதலியன திறத்தல். வாய்விண்டு கூறும் (பாகவத. 1, தன்மபுத்திர. 29). 
7. To solve, as a riddle or conundrum; பிதிர் முதலியன விடுத்தல். இந்தப் பிதிரை விள்ளு.